நகராட்சி நிர்வாகதுறை வளர்ச்சி திட்டபணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகதுறை வளர்ச்சி திட்டபணிகள் ஆய்வு

Update: 2022-12-03 10:15 GMT

தஞ்சாவூரில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகதுறை வளர்ச்சி திட்டபணிகள் குறித்த  நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே. என் .நேரு தலைமையில் நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி  நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகதுறை வளர்ச்சி திட்டபணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்  நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே. என் .நேரு தலைமையில் நடைபெற்றது.

அரசுதலைமை கொறடா கோவி.செழியன், நகராட்சி நிர்வாகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பா. பொன்னையா,  தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி ,பேரூராட்சிகள் ஆணையர் ஆ. செல்வராஜ் , மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ,நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர்  அ.அருண் தம்புராஜ் , மயிலாடுதுறை மாவட்டஆட்சித் தலைவர்  இரா.லலிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 கூட்டத்தில்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு  பேசியதாவது: முதலமைச்சரின்  உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகதுறை வளர்ச்சி திட்டபணிகள் குறித்த மண்டலஅளவிலான ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை   மாவட்டங்களின் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்,கலைஞர் நகர்ப்புறமேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்,எரிவாயு தகனமேடை, சாலைப் பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள், நீர்நிலை மேம்பாடு  பணிகள்,  உள்கட்டமைப்பு   மற்றும் அடிப்படை வசதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், தூய்மை இந்தியா திட்டம் (2.0) மூலம் சமுதாய கழிப்படம், பொதுக் கழிப்பிடம் பணிகள்,15-வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் நகர்நல மையம் பணிகள்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், 2022 2023 -ஆம் ஆண்டில், அரசுபள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்தும்,கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், பூங்கா அமைக்கும் பணிகள், தெருவிளக்குகளை  எல்.இ.டி விளக்குகளாக மாற்றியமைத்தல், தமிழ்நாடு நகர்ப் புறசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், புதைசாக்கடை திட்டப்பணிகள் ஆகிய  பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 67 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் திருவிடைமருதூர். வேப்பத்தூர் பேரூராட்சிகளைச் சார்ந்த2 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.117.09 கோடிமதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.82 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. வழங்கப்படவுள்ள குடிநீர் அளவு -5.97 எம்எல்டி, கும்பகோணம் ஒன்றியத்தைச் சார்ந்த 134 குடியிருப்புகளுக்கான கூட்டுகுடிநீர்த் திட்டம் ரூ.91.13 கோடிமதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. 95 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. வழங்கப்படவுள்ள குடிநீர் அளவு -5.45  எம்எல்டி

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர் ஒன்றியங்களுக்குட்பட்ட 214 குடியிருப்புகளுக்குரூ.265.29 கோடி மதிப்பீட்டில் 1.79 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம்.  தஞ்சாவூர் மாவட்டம், பாநாசம் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 252 குடியிருப்புகளுக்குரூ. 288.02 கோடிமதிப்பீட்டில் 2.09 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள் ஆகும் என்றார் அமைச்சர்  கே.என்.நேரு .

இக்கூட்டத்தில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர்   சு.கல்யாணசுந்தரம், தில்லி சிறப்பு பிரதிநிதி. ஏ.கே.எஸ்.விஜயன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்  செ. ராமலிங்கம், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள்  துரைசந்திரசேகரன் (திருவையாறு),  டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்)  க.அன்பழகன் (கும்பகோணம்),  அண்ணாதுரை (பட்டுக்கோட்டை),   எம்.எச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்),  ஆளுர்.ஷா.நவாஸ் (நாகப்பட்டினம்),  சு.ராஜ்குமார் (மயிலாடுதுறை),  மு.பன்னீர்செல்வம் (சீர்காழி),   நிவேதாமுருகன் (பூம்புகார்), வி.பி.நாகைமாலி (கீழ்வேலூர்).

பூண்டிகலைவாணன் (திருவாரூர்),  டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி),  க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி),  கூடுதல் ஆட்சியர் வருவாய்  என்.ஓ.சுகபுத்ரா ,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  எச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  நகராட்சி நிர்வாக  மண்டல இயக்குனர்  ஜானகிரவீந்திரன்,  மாநகராட்சி  மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்), கு.சரவணன் (கும்பகோணம்),  மாவட்ட  ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்),  சு.ப.தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.கே.முத்து, மாநகராட்சி ஆணையர்கள்  சரவணகுமார் (தஞ்சாவூர்),  செந்தில் முருகன் (கும்பகோணம்) மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News