பார்வையற்றோர் அரசுமேல்நிலைப்பள்ளி மேம்பாட்டு பணிக்கு தனியார் அறக்கட்டளை நிதி

Blind School -அன்னை வராஹி அறக்கட்டளை சார்பில் நன்கொடை ரூ 27 லட்சத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கினர்

Update: 2022-10-08 08:00 GMT

அன்னை வராஹி அறக்கட்டளை சார்பில் நன்கொடை ரூ 27 லட்சத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கினர் 

Blind School -தஞ்சாவூர் மாவட்டம் மேம்பாலம் பார்வையற்றோர் அரசுமேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டு பணிக்காக அன்னை வராஹிஅறக்கட்டளை சார்பில் நன்கொடையை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம்  வழங்கினர் .

பின்னர் மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தஞ்சை மேம்பாலம் அருகில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயங்கி வரும் பார்வை திறன் குறைபாடுடையவர் களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படிக்கும் நிலையில், கூடுதல் வகுப்பறைகள் தேவை எனபள்ளி தலைமை ஆசிரியை சோபியாமாதவி  கோரிக்கை வைத்திருந்தார்.

இந்தக்கோரிக்கையை ஏற்று அன்னை வராஹி அறக்கட்டளை சார்பில் சிங்கப்பூரை சேர்ந்த அறக்கட்டளை உறுப்பினர்கள், அன்பர்கள் உதவியோடு ரூபாய் 27 லட்சத்திற்கான நன்கொடையை காசோலையாக  அறக்கட்டளை நிர்வாகி குருஜி வராகி மைந்தன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த  இந்திரயோகன் ஆகியோர் வழங்கினர். இந்த நன்கொடையானது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிகத் தரமான கட்டிடம் கட்டப்பட்டுமாணவர்களின் வசதிக்காக 5 மாதத்தில் ஒப்படைக்கப்படும், இது போன்றநன்கொடைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று மாவட்டஆட்சித் தலைவர்   தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளிதலைமை ஆசிரியை சோபியாமாதவி  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News