தள்ளாடும் தலையாட்டி பொம்மை வியாபாரிகள்

மினி லாக்டவுனில் கோவில்கள் மூடப்பட்டதால் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், 150-க்கும் மேற்பட்ட பொம்மை செய்யும் தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Update: 2021-04-26 11:30 GMT

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் சுற்றி பார்ப்பதற்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்வர்.

கோவிலுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் தலையாட்டி பொம்மையை மறவாமல் தங்களது வீடுகளுக்கு வாங்கிச் செல்வர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு பெரிய கோவில் எதிரே 30க்கும் மேற்பட்ட தலையாட்டி பொம்மை கடைகள் செயல்பட்டு வந்தன.

அந்த கடைகளை ஸ்மார்ட் சிட்டியின் கீழ் கோவிலுக்கு எதிரில் உள்ள கடைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தினர். அந்த சூழ்நிலையில், எங்களது வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக இருந்து வந்தது. எங்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து தருவதாக கூறி மாநகராட்சி இதுவரை ஒதுக்கவில்லை.

தலையாட்டி பொம்மை வியாபாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா தலங்கள், கோவில்கள் மூடப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

பொம்மை கடை நடத்தி வரும் வியாபாரிகள் மட்டுமின்றி தலையாட்டி பொம்மை செய்யும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றன. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நிவாரணத்தொகை வழங்கி தொழிலாளர்கள் நலனை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News