உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு புத்தாக்கப் பயிற்சி விழிப்புணர்வு கூட்டம்

வேளாண்மை விற்பனை வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

Update: 2022-06-09 05:30 GMT

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் குறித்த மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வேளாண்மைவிற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை தஞ்சாவூர் ,தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் குறித்த மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டம், வேளாண்மைமற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் ,கூட்டுறவுத்துறை அமைச்சர்  ஐ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை  அமைச்சர் அர.சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆகியோர் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை  வேளாண்மை உற்பத்திஆணையர் மற்றும் செயலர் சி.சமயமூர்த்தி  பல்கலைக்கழக துணைவேந்தர் (கோவை) முனைவர் வெ.சீதாலட்சுமி,,வேளாண்மைதுறை இயக்குநர்.ஆ. அண்ணாதுரை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறைமுனைவர் எஸ். நடராஜன் ,மாவட்டஆட்சித் தலைவர். தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ள். ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் இவ்விழாவின் கண்காட்சிஅரங்குகளை திறந்துவைத்து தேசியவேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு நீர்ப்பாசனவேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்,பாரதபிரதமரின் சிறுஉணவுபதப்படுத்தும் இயக்கம் ஆகியவற்றின் மூலம் ரூ.44.637 இலட்சம் மதிப்பிலானநலத்திட்டஉதவிகளை வேளாண்மைமற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம்   வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வரின்  சீரியவழிகாட்டுதலின்படி உழைக்கும் உழவர் நிலை உயர வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சுயஉதவிகுழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முன்வரும் தொழில் முனைவோர் அனைவருக்கும் திட்ட செலவினத்தில் 30% அல்லது அதிகபட்சமாகரூ.10 இலட்சம் மானியம் வழங்கப்படும் எனவும், இதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் சென்றடைய விவசாயிகளுக்கனா விழிப்புணர்வு  கூட்டம் மாநிலம் முழுவதும் மண்டல அளவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒருபகுதியாக  தஞ்சாவூர்,  திருவாரூர்,  நாகப்பட்டினம், மயிலாடுதுறை   மற்றும் பெரம்பலூர் ஆகிய  மாவட்டங்களுக்கு    தஞ்சாவூரில் உள்ள   தேசிய உணவுதொழில்  நுட்பம்,தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் இவ்விழா துவக்கப்பட்டு,மண்டல அளவிலான விவசாய பெருமக்கள் பெருமளவில் திட்டவாய்ப்புகளின் விளக்கம் பெற்று பயனடைந்துள்ளனர்.

வணிக இணைப்புகளைஊக்குவிக்கும் செயல்பாடுகள் நேரடிகொள்முதல் ஏற்பாடுகள் செய்தல்,விநியோக சங்கிலி ஒருங்கிணைப்பில் முதலீடு செய்தல், சந்தை வழி வேளாண்மை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றிற்குவழிவகுக்கும் விதமாக இப்பயிற்சி  நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு சிறுவிவசாயிகள் நட்பமைப்பு மற்றும் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை  நவீனமயமாக்கல் திட்டம் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வணிக முன்னேற்றத்திற்காக நிதி வழங்கப்படுகிறது .

மேலும், உணவுபதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூடுதல் பயிற்சி,வேளாண் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மற்றும் சந்தைவாய்ப்புகள் விவரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான  பல்வேறு நிதியுதவி  வாய்ப்புகள்,வேளாண் தொழில் முனைவோருக்கான நிதியுதவி  வட்டிமானியம் மற்றும் நிறைவாக  விவசாயிகளுக்கு தமிழகஅரசால் வழங்கப்படுகின்ற பல்வேறு  சந்தைவாய்ப்புகள், கடனுதவி, வட்டி மானியம் பதப்படுத்துதலில் புதிய உத்திகள் சந்தைப் படுத்துதலுக்கான  தொழில்நுட்ப செய்தி பரிமாற்றம் குறித்து  போதிய விழிப்புணர்வும், போதிய தொழில் நுட்பஅறிவும் பெறுவதற்கு வழிகாட்டியாக அமைந்தது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் தயாரிப்புகளான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சிஅரங்குகளில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது, கண்களுக்க  விருந்தாகவும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயனடையும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது என்றும் வேளாண்மைமற்றும் உழவர் நலத்துறைஅமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

Tags:    

Similar News