தஞ்சாவூர் பெரியகோவில் உண்டியல்களில் ரூ.10.88 லட்சம் காணிக்கை

தஞ்சை பெரியகோவிலில், பக்தர்கள் மூலம் காணிக்கையாக பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 650 ரூபாய் வசூலாகி உள்ளது.

Update: 2021-09-17 11:45 GMT

தஞ்சை பெரியகோவில்


பிரதிபெற்ற தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி, வராஹி, விநாயகர், முருகன், கருவூரார் சன்னதி உள்பட 11 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பக்தர்கள் பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தினத்தில் திறந்து எண்ணப்படுகிறது.

அதன்படி,  11 உண்டியல்களும் இன்ரு திறந்து, காணிக்கை பணம் எண்ணும் பணியில் அலுவலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயயுதவிக்குழுவினர் ஈடுபட்டனர். இப்பணியை ஹிந்து அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில், செயல் அலுவலர் மாதவன் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

உண்டியல் எண்ணிக்கை முடிவில், 11 உண்டியல் மூலம், பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 650 ரூபாய் காணிக்கை பணம் வசூலாகியிருந்தது. கொரோனா காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையின்றி, வெளிநாட்டு கரன்சிகளும், தங்கம், வெள்ளி நகைகள் ஏதும் இம்முறை காணப்படவில்லை என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News