தஞ்சை மருத்துவமனைகளில் அரசு சுகாதாரத்திட்ட இயக்குநர் ஆய்வு

தஞ்சாவூர் மருத்துவமனையினை சுகாதார திட்ட இயக்குநர் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சி/யர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் ஆய்வு

Update: 2023-12-21 15:00 GMT

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராசா மிராசுதார் மருத்துவமனையினை தமிழ்நாடு அரசு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்தராவ், மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்  மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராசா மிராசுதார் மருத்துவமனையினை தமிழ்நாடு அரசு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்தராவ், மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராசா மிராசுதார் மருத்துவமனையினை தமிழ்நாடு அரசு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்த ராவ் , மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்  ஆகியோர்  (21.12.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு அரசு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்தராவ் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராசா மிராசுதார் மருத்துவமனை ஆகிய இடங்களில் கள ஆய்வு மற்றும் திட்ட செயலாக்கத்தினை இன்று ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் அமையப்பட்டுள்ள அடிப்படை வசதிகளின் செயல் பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. PET-CTScanமையம், புதிதாக கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமான பணிகள்குறித்தும், உடல் முழு பரிசோதனை நிலையம், தொற்று நோய் பிரிவு, ஆய்வகம், மருந்து கிடங்கு, அவசர சிகிச்சை பகுதி, கண் சிகிச்சை மையம், சமையலறை, நோயாளிகளுடன் உடனிருப்போர் தங்குமிடம், நோயாளிகள் அறை போன்ற பல்வேறு வசதிகள் மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள் அணுகு முறைகள் பற்றி இன்று ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்ள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர அலுவலர்களுடன் ஆய்வு மேற் கொண்டு, 300 படுக்கை வசதிகள் கொண்ட நோயாளிகள் அறை, அவசர சிகிச்சை மையம், போன்ற பல்வேறு வசதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து மேற்கொள்ளப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்தராவ் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையின் பயன்பாடு சிகிச்சை பெறுபவர்களுக்கு முறையாக சென்றடை கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பகுதி மற்றும் சர்க்கரை நோய் பாத சிகிச்சை மையம் நடத்தும் அறுவை சிகிச்சை பயிலரங்கத்தில் மருத்துவர்களுடன் தமிழ்நாடு அரசு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்த ராவ் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்தராவ், மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் ஆகியோர் தலைமையில் சுகாதாரத் துறைச் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஆர்.பாலாஜிநாதன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.திலகம், துணை இயக்குநர்கள் மரு.கலைவாணி (சுகாதாரப்பணிகள்) மரு.மலர்விழி (குடும்பநலம்), மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.ச.இராமசாமி, மாநில திட்ட மேலாளர் மரு.மருது துரை, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் (கட்டடங்கள்) என்.எஸ்.ரவிச்சந்திரன், நிலைய மருத்துவ அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News