முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவச் சிலையை சேதப்படுத்தியவர் கைது

மதுபோதையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உருவச்சிலை சேதப்படுத்திய நபரை தஞ்சை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2022-01-25 07:30 GMT

தஞ்சாவூரில் எம்ஜிஆர் உருவச்சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சேகர்

மதுபோதையில் எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்திய நபரை போலீஸார்   கைது செய்தனர்.

தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி நான்கடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் இரண்டு அடி உயரத்தில் எம்ஜிஆர் சிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. சிலையின் அருகே டீக்கடை ஒன்று உள்ளது. இரவு டீ கடைக்காரர் கடையை சாத்திவிட்டு மீண்டும் அதிகாலை 5 மணிக்கு கடையை திறக்க வந்தபோது அருகில் இருந்த எம்ஜிஆர் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அமமுக,அதிமுகவினருக்கு தகவல் தெரிய வர சம்பவ இடத்திற்கு வந்த அமமுக அதிமுகவினர் காணாமல் போன எம்.ஜி.ஆர் சிலையினை அக்கம்பக்கத்தில் தேடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை மேற்கு காவல் துறையினரும் அக்கம்பக்கத்தில் தேடிய நிலையில், அருகே இருந்த பெட்டிக் கடையின் பின்புறம் எம்ஜிஆர் சிலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.பின்னர் மேற்கு காவல் நிலைய போலீசார் அங்கு உள்ள சிசிடிவி ஆய்வு மேற்கொண்டதில் அதில் மதுபோதையில் சேகர் என்பவர் எம்.ஜி.ஆர் சிலையை தள்ளிவிட்டது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீஸார் சேகரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News