பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சை, நாகை திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்

Update: 2022-01-05 08:30 GMT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தஞ்சை, நாகை திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு 8000 வழங்கியதை ஏற்க முடியாது, ஒரு ஹெக்டேருக்கு 70 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும், மழையால் வாழ்வாதாரம் இழந்து உள்ள விவசாய கூலி தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் ஆன்-லைன் பதிவு முறையை உடனடியாக ரத்து செய்து, பழைய முறைப்படி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளார். கோரிக்கையை அரசாங்கம் ஏற்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள்  தெரிவித்தனர்.


Tags:    

Similar News