தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்டஆட்சியர் ஆய்வு

பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

Update: 2023-05-27 14:00 GMT

 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் காவிரி ஆற்றின் குறுக்கே அரசலாற்று தலைப்பில் நீர்வளத்துறை சார்பில் புதிதாக கதவனை கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்  (27.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் காவிரி ஆற்றின் குறுக்கே அரசலாற்று தலைப்பில் நீர்வளத்துறை சார்பில் புதிதாக கதவனை கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் குறித்தும், பாபநாசம் ஒன்றியம் இன்னம்பூர் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவது  குறித்தும், கும்பகோணம் ஒன்றியம் திம்மக்குடி வாய்க்கால் தூர்வாரும் பணிகள் குறித்தும்,திருவிடைமருதூர் வட்டம் சாத்தனூர் கிராமம் பழவார் ஆறு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.

மேலும் சுவாமிமலை  பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறைகட்டிடம் கட்டப்பட்டு வருவது குறித்தும், கும்பகோணம் ஒன்றியம் சோழபுரம்  ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலநடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானம் பணிகள் போன்ற வளர்ச்சி திட்டபணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

முன்னதாகதஞ்சாவூர் மாநகராட்சி தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக் குழுவினரின் கலைபொருட்கள் விற்பனை கண்காட்சியினை மாவட்டஆட்சித் தலைவர்  இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தஆய்வின்போது, மாநகராட்சிஆணையர்  சரவணக்குமார். கும்பகோணம் ஒன்றியக்குழுத் தலைவர் காயத்ரி அசோக்குமார், உதவிசெயற்பொறியாளர்  கே. முத்துமணி உதவிபொறியாளர்கள் முத்துக்குமார், வெங்கடேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்  பூங்குழலி,  சூரியநாராயணன் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News