நுகர்பொருள் வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்

தொழிற்சங்க தலைவர் புண்ணீஸ்வரன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி கோரிக்கை

Update: 2023-12-19 15:00 GMT

தொழிற்சங்க தலைவர் புண்ணீஸ்வரன் 3ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி கோரிக்கை

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென தொழிற்சங்க தலைவர் புண்ணீஸ்வரன் 3ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமார் 30 ஆண்டுகள் மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர்.ஏஐடியூசிசங்க மாநில செயலாளராக செயல்பட்டு வந்தவர், ஓய்வு பெற்ற பின்னர் நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பொறுப்பேற்று சுமை தூக்கும் தொழிலாளர்களின் உரிமைக ளுக்காகவும், சலுகைகளுக்காகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் தனது வாழ்நாள் இறுதிவரை போராடி மறைந்தவர் .

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு கூலி பத்து ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கைகளை முன்வைத்து போராடி பெற்றுத் தந்தவர். இவரது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் கீழ ராஜ வீதி ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது .

நிகழ்விற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். நிகழ்வில் ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன், அலுவலக செயலாளர் பி.சுதா, வாணிபக் கழக சங்க நிர்வாகி நாடியப்பன்,உடல் உழைப்பு சங்க நிர்வாகி கே.கல்யாணி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்த வெளி கிடங்கு களில் பணியாற்றம் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், பிரதி மாதம் 5ஆம் தேதி சம்பளம் வங்கி கணக்கில் ஏற்றப்பட வேண்டும், இவர்களுடைய மாத சம்பளத்தில் இபிஎப் வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News