தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடக்கம்: ஆட்சியர் ஆய்வு

கரும்பு அரவைப் பருவம் நேற்று தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் சர்க்கரை ஆலை அரவையை பார்வையிட்டார்

Update: 2023-12-05 07:00 GMT

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் தொடங்கிய அரவை பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம்  அறிஞர் அண்ணா  சர்க்கரை  ஆலையில்  அரவை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அறிஞர்அண்ணா சர்க்கரை ஆலையின் 2023-24 கரும்பு அரவைப் பருவம் நேற்று தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் .தீபக்ஜேக்கப் சர்க்கரை ஆலை அரவையை பார்வையிட்டார்.

இவ்வாலையில் நடப்பாண்டு அரவைக்கு 5694. ஏக்கர் பரப்பில் கரும்பு பதிவு செய்யப்பட்டு 1,83,235டன்கள் மதிப்பீ செய்யப்பட்டு அரவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023 அரவைப்பருவத்தில் வெட்டப்பட்ட கரும்பிற்கான கிரயத் தொகை ஆலையிலிருந்து வழங்கி முடிக்கப்பட்ட நிலையில் நடப்பு 2023-2024 அரவைக்கு அனுப்பும் கரும்பிற்கான கிரயத் தொகை உரிய காலத்தில் வழங்கிடநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2023-24 நிதிஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பருநாற்று, ஒருபருகரணை மற்றும் வல்லுநர் விதை கரும்பு நடவு செய்த விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ரூ.14.73 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு 2023-24 நடவு பருவத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (KAVIADP) மூலம் ரூ.0.27 இலட்சம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சிதிட்டங்கள் மூலமாகவும் தொடர்ந்து கரும்பு நடவுக்கான மானியங்கள் வழங்கப்பட உள்ள நிலையில் அனைத்து கரும்புவிவசாயிகளும் கூடுதல் பரப்பளவில் கரும்புபயிர் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்த லைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்தார்கள்.

இந்தஆய்வின்போது ஆலையின் தலைமை நிர்வாகி ஏ.ரவிச்சந்திரன், தலைமைகணக்கர் உலகநாதன், கரும்பு பெருக்கு அலுவலர் நவநீதன், நிர்வாக அலுவலர் சரவணன், துணைத் தலைமைப் பொறியாளர் நாரயணன், தலைமை இரசாயனர்  வேணுகோபாலன், பொறியாளர்கள் மற்றும் கரும்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News