தஞ்சையில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

அளிக்கப் பட்ட அனைத்து மனுக்கள் மீதும் விரைவில் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்.தீபக் ஜேக்கப் தெரிவித்தார்

Update: 2023-12-22 14:45 GMT

தஞ்சையில் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கான  குறை கேட்புக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும்  குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில்  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்  இன்று(22.12.2023) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர் தம் வாரிசுகள்,சுதந்திரப் போராட்ட வீரர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், தனியார் பேருந்துகளில் கட்டண சலுகை,  வேலை வாய்ப்பில் முன்னுரிமை, கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிதாக அமைக்கப்படவுள்ள மற்றும் அமைக்கப்பட்ட குடியிருப்பு நகர்களுக்கு மறைந்த தியாகிகளின் பெயரினைச் சூட்டுதல், மறைந்த தியாகிகளுக்கு சிலை வைத்தல்,  மத்திய அரசு ஓய்வூதியம் கோரிய மனுக்கள் உள்ளிட்ட 48 மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளிக்கப் பட்டது.  அனைத்து மனுக்கள் மீதும் விரைவில் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்.தீபக் ஜேக்கப் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமால் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News