தஞ்சாவூர் அரசுதொழிற்பயிற்சிநிலையத்தில் குறுகிய கால தொழில்பயிற்சி பெற அழைப்பு

இதில் சேர்வதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 14 முதல் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும்.

Update: 2022-03-16 04:00 GMT

,தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்  அளிக்கப்படும் குறுகியகால தொழில்பயிற்சியில் பின்வரும் தகுதியுள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.

தேசியகல்விக் கொள்கைப்படி தஞ்சாவூர் அரசுதொழிற்பயிற்சிநிலையம் குறுகியகாலபயிற்சிஅளிக்கும் (Skill Hub) பயிற்சிமையமாக,மத்தியஅரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது.  அதனை தொடர்ந்து, இந்நிலையத்தில் 1. பற்றவைப்பவர் மேம்பாட்டுபயிற்சி 2. தொழில் நுட்ப மின் வினியோக உதவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளில் குறுகியகால பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

இதில் சேர்வதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 14 முதல் 45 வயதுஉள்ளவராக இருக்கவேண்டும். இம்மாவட்டத்தை சேர்ந்த,பள்ளிகல்லூரி முடித்தஅல்லது இடைநின்ற இளைஞர்கள் பயிற்சியில் சேர்வதற்கு பின்வரும்  முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும்  அரசு-தனியார் நிறுவனங்களில் உடனடிவேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் வேலை இல்லாத மேற்காணும் தகுதிஉள்ள அனைத்து தரப்பினரும் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு.. துணை இயக்குநர்-முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்,மணிமண்டபம் எதிரில், தஞ்சாவூர் அலைபேசிஎண்: 958555773 - 9786485763.

Tags:    

Similar News