தஞ்சாவூரில் புத்தகக்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Book Exhibition Preparation Work in Thanjavur

Update: 2022-06-25 17:00 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரண்மனைவளாகத்தில் ஐந்தாவது புத்தகத்திருவிழா கண்காட்சி முன்னேற்பாடுபணிகள் குறித்துமாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  நேரில் பார்வையிட்டுஆய்வுசெய்தார்.

பின்னர் மாவட்டஆட்சித் தலைவர தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற (15-7.2022) முதல் (25.7.2022) வரை 11 நாட்கள் மாவட்டநிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்துநடத்தும் மாபெரும் ஐந்தாவது புத்தகத்திருவிழாத ஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த புத்தக திருவிழா சிறப்பாக அமைவதற்காக அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று ஒவ்வொருதுறைகளும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.புத்தகத் திருவிழா நடைபெறும் வளாகத்தில் புத்தக திருவிழாவின் அரங்குகள் அமைப்பது குறித்தும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் குறித்தும் உணவுதிருவிழா நடைபெறும் இடம் குறித்தும் களஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துஆலோசித்து பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இப்புத்தகக் கண்காட்சியின் மூலம் பள்ளிகல்லூரி மாணவமாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்படுத்திடமுடியும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்துடன் இக்கண்காட்சி நடைபெற உள்ளதாக  ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தெரிவித்தார்.இவ் ஆய்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சிஆணையர்  சரவணகுமார் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News