பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் கூலித்தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

பெண் தொழிலாளர்கள் மூட்டை தூக்க வேண்டும் என வற்புறுத்துவதை கைவிட்டு முன்பு போல் டிராக்டரில் ஏற்றி வயல்களுக்கு மூட்டைகளை கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

Update: 2023-03-11 17:30 GMT

தஞ்சாவூர் ஏஐடியூசி அலுவலகத்தில் நடந்த ஏஐடியூசி அரசு பண்ணை தொழிலாளர் சங்கத்தின் காட்டுத் தோட்டம் கிளை கூட்டம்

காட்டு தோட்டம் மண் நீர் மேலாண்மை ஆராய்ச்சி பண்ணையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகின்ற தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அரசு பண்ணை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏஐடியூசி அரசு பண்ணை தொழிலாளர் சங்கத்தின் காட்டுத் தோட்டம் கிளை கூட்டம், தஞ்சாவூர் ஏஐடியூசி அலுவலகத்தில்  பி.கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது. ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார்,. சங்க மாநில பொதுச் செயலாளர் உ.அரசப்பன், சங்க நிர்வாகிகள் வனிதா, பிரபாகரன், சாந்தி, பரிமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் காட்டுத் தோட்டம் பண்ணையில் 40 தின கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்த வேலையை. தற்பொழுது 17 தினக்கூலி தொழிலாளர்கள் வேலை பார்க்க வைப்பதால், மிகுந்த பணிச்சுமையும், வேலை நேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டிய நிலையும் உள்ளது. எனவே புதிதாக தினக்கூலி பணியாளர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும்.  தினக்கூலியாக பணிபுரிந்த 17 தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணி புரிந்து வருவதால் அரசு ஆணைப்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பெண் தொழிலாளர்கள் மூட்டை தூக்க வேண்டும் என வற்புறுத்துவதை கைவிட்டு முன்பு போல் டிராக்டரில் ஏற்றி வயல்களுக்கு மூட்டைகளை கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கச் செய்ய வேண்டும். பணிக்கொடை வழங்கல் சட்டப்படி அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும்  இக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் காட்டுத் தோட்டம் பண்ணை முன்பு வருகிற மார்ச் 28~3~2023 -ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

Tags:    

Similar News