இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 97 ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கப்பட்டது

Update: 2022-12-27 02:45 GMT

பைல் படம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 97வது ஆண்டு துவக்க நாள் விழா தஞ்சாவூரில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி துவக்கப்பட்டது. நாட்டின் விடுதலைக்காகவும், அன்றாட உழைக்கின்ற ஏழை,எளிய,நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், மக்களின் அடிப்படை தேவைகளான இருக்க இடம், உணவு, குடிநீர், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைவருக்கும் கிடைத்திடவும், வர்க்க, பேதமற்ற சுரண்டலற்ற, சோசலிச சமுதாயத்தை உருவாக்கிடவும் கட்சி துவக்கப்பட்டு 96 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இன்றைய தினம் 97வது ஆண்டு துவக்க நாளாகும்.

கட்சி துவக்கப்பட்ட 97 ஆம் ஆண்டு துவக்க நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர் தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன் கட்சியின் 97வது ஆண்டு துவக்க நாள்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா. கட்சியின் போராட்ட தியாக வரலாறு குறித்து உரையாற்றினார். நிகழ்வில் மாநகர குழு உறுப்பினர்கள் பி. செல்வம், எஸ் தியாகராஜன், நாடிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

உறுதி ஏற்பு: ஒன்றிய மோடி அரசு நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற பெட்ரோல், டீசல்,எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாததால், சிறு, குறுதொழில்கள் முடங்கி உள்ளது, அத்தியாவசியமான உணவு பொருட்கள் விலை ஏறி உள்ளது, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது, கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்கள் தாரை வார்க்கப்படுகிறது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்கள் மதத்தின் பெயரால் பிரிக்கப் படுகிறார்கள், ஒட்டு மொத்தமாக மக்களுக்கு தொழிலாளர்களுக்கு எதிரான பிஜேபி, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் மதவாத பாசிச சக்திகளை முறியடிக்க முழு மூச்சுடன் பாடுபடுவதென  உறுதி ஏற்கப்பட்டது. 

Tags:    

Similar News