தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.27 கோடியில் புதிய பல்வேறு துறை அலுவலங்கள் திறப்பு

அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்பி சு. கல்யாணசுந்தரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பங்கேற்றனர்

Update: 2022-12-13 12:30 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் 227.62 இலட்சம் மதிப்பீட்டில்  9 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 227.62 லட்சம் மதிப்பீட்டில் 9   புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி    திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்  227.62  லட்சம் மதிப்பீட்டில்  9   புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடங்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , அரசு தலைமை கொறடா கோவி.செழியன்,  மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்  திறந்து வைத்தார்கள்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளி ஊராட்சியில் ரூபாய் 17.26 இலட்சம் மதிப்பீட்டில் குரு வட்ட அளவர் குடியிருப்புடன் கூடிய புதிய அலுவலக கட்டிடமும், பூதலூர் வட்டம், அகரப்பேட்டை ஊராட்சி, திருவையாறு வட்டம் மன்னார் சமுத்திரம் ஊராட்சி மற்றும் மேலதிருப்பந்துருத்தி ஊராட்சியிலும் தலா ரூபாய் 38 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் துணை வேளாண் விரிவாக்க மைய புதிய கட்டிடமும், திருவையாறு வட்டம்,  கண்டியூர் ஊராட்சியில் ரூபாய் 34.50  லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தக புதிய கட்டிடம்.

பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், இலுப்பைக்கோரை ஊராட்சியில் ரூபாய் 10.93 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடிமைய புதிய கட்டிடமும், சக்கராப்பள்ளி ஊராட்சியில் ரூபாய் 10.93 இலட்சம் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், திருப்பனந்தாள் வட்டம் அணைக்கரை ஒன்றியத்தில் ரூபாய் 19.00 இலட்சம் மதிப்பீட்டில் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், திருவிடைமருதூர்  வட்டம் முருக்கங்குடி ஊராட்சியில் ரூபாய் 21.00 இலட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் என மொத்தம் 227.62 இலட்சம் மதிப்பீட்டில்  9 புதிய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இந்நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்  துரைசந்திரசேகரன்,வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சாவூர்),  பூர்ணிமா (கும்பகோணம்), கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் மரு.க.தமிழ்ச்செல்வம், ஊரகவளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை நாகவேலு, வேளாண்துறை இணை இயக்குனர்  எஸ்.ஈஸ்வர் (பொ), நிலஅளவைத் துறை உதவி இயக்குனர்  சு.தேவராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர்  ஆர்.உஷாபுண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சிதுணை தலைவர்  எஸ்.க.முத்து, ஒன்றிய குழுத் தலைவர்கள் ச.அரங்கநாதன் (பூதலூர்), .கோ.அரசாபகரன் (திருவையாறு), பெ.சுபாதிருநாவுக்கரசு (திருவிடைமருதூர்) மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News