ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.

Update: 2021-08-10 15:15 GMT

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் என்கிற நிசும்பசூதனி கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடக்கும். இந்நிலையில் நாளை (11ம் தேதி) ஆடிப்பூரம் விழா என்றாலும், இன்று ஆடிப்பூரம் காலை 11.24 மணிக்கு துவங்கியதால், நிசும்பசூதனி அம்மனுக்கு  பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வட பத்ரகாளியம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News