தென்காசி ரயில் நிலையத்தில் வன உயிரின விழா கொண்டாட்டம்

தென்காசி ரயில் நிலையத்தில் வன உயிரின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-03 06:58 GMT

தென்காசி ரயில் நிலையத்தில் எம்எல்ஏ ராஜா மரக்கன்று நட்டுவைத்தார்.

தென்காசி ரயில் நிலையத்தில் உலக வன உயிரின நாள் விழா கொண்டாட்டம் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறை மற்றும் தென்னக ரயில்வே இணைந்து நடத்திய உலக வன உயிரின நாள் விழா தென்காசி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

வன உயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று வன உயிரின நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் விழாக்கள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக தென்காசி ரயில் நிலையத்தில் 03.03.23 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது.

வரவேற்புரை ஆற்றிய ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, வன உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் மரங்கள் நடுவதின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். மரம் நடும் விழாவை தொடங்கி வைத்து பேசிய சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா பேசுகையில், தமிழ்நாடு அரசு மரம் நடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது.

மரங்கள் நடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி ரயில் நிலையத்தில் தற்போது மரங்கள் வெட்டப்பட்டு வந்த நிலையில் சில வருடங்களில் நிறைய மரங்கள் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மரம் நடுவது முக்கியமல்ல அதனை நல்ல முறையில் பராமரித்து பெரிய மரமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி பிராணா அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News