அரியபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் மனு

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத் தலைவர் ஜான் ஜெயபால் மனு அளித்தார்.

Update: 2022-06-23 11:19 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத் தலைவர் ஜான் ஜெயபால் மனு அளித்தார்.

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத் தலைவர் ஜான் ஜெயபால் ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

இந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியபுரம் ஊராட்சி பகுதியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலைகள் மிகவும் மோசமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியபுரம் ஊராட்சியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் இணைப்புகள் உள்ளன. தற்போது மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. அந்த இணைப்புக்கு தேவையான குடிநீர் ஆதாரத்தை உருவாக்க வேண்டும். புதிய தொட்டிகள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்க நவடிக்கை எடுக்க வேண்டும். திப்பணம்பட்டி முதல் நாடார் பட்டி வரை உள்ள சாலைகள் தற்போது இந்தத் துறையின் கீழ் வருகின்றது என்று தெரியவில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எங்கள் வசம் இல்லை என்று தெரிவிக்கின்றனர். அதேபோல் நெடுஞ்சாலைத்துறை எங்கள் வசம் இல்லை என்று தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News