ஆக்கிரமிப்பு: தென்காசி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தென்காசி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-05-24 03:57 GMT

தென்காசி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தென்காசி நகராட்சி பகுதிகளில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இந்த கடை வீதிகளில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு இன்று அகற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இன்று தென்காசி வியாபாரிகள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையின் போது இரண்டு ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நிறைந்து காணப்படுகிறது.

இந்த சமயத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக நகராட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து தென்காசி வியாபாரிகள் காவல்துறையினர்க்கும், நகராட்சிக்கும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Tags:    

Similar News