மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவியில் குளிக்க தடை

Courtallam Falls -மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-05 06:11 GMT

வெறிச்சோடி காணப்படும் குற்றால பிரதான அருவி.

Courtallam Falls -நேற்று இரவு பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு . சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி வட மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் நேற்று இரவு தென்காசி, செங்கோட்டை , கடையநல்லூர், ஆலங்குளம், கடையம், குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கன மழை பெய்ததால், குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு பெய்த தொடர் மழையால் நகர்புற சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணர் ஆலயத்தில் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் முழங்கால் வரை தேங்கியுள்ள தண்ணீரில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றைய அணையின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-11-2022):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 58 அடி

நீர் வரத்து : 239 கன அடி

வெளியேற்றம் : 40 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 65 அடி

நீர்வரத்து : 199.21 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 50.20 அடி

நீர் வரத்து : 37 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 33.62 அடி

நீர் வரத்து: 4 கன அடி

வெளியேற்றம்: 3 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 84.75 அடி

நீர் வரத்து : 40 கன அடி

நீர் வெளியேற்றம்: 40 கன அடி

மழை அளவு :

கடனா : 18 மி.மீ

ராமா நதி : 135 மி.மீ

கருப்பா நதி: 52 .5 மி.மீ

குண்டாறு : 14.2 மி.மீ

அடவிநயினார் : 14 மி.மீ

ஆய்குடி : 38 மி.மீ

செங்கோட்டை: 19.8 மி.மீ

தென்காசி : 49 மி.மீ

சங்கரன்கோவில்: 46 மி.மீ

சிவகிரி: 62 மி.மீ.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News