வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் மாணவி சாருலதா வெற்றி

கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் முதுகலை மாணவி சாருலதா வெற்றி பெற்றள்ளார்.

Update: 2021-10-13 05:32 GMT

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில்  22வயது பொறியியல் முதுகலை மாணவி சாருலதா  வெற்றி பெற்றுள்ளார். அவர் தற்போது  எம்இ படித்து வருகின்றார். நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 3336 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்துவடிவை விட 796 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு சதவீதம்52.44%

மாணவியாக இருந்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற்றதால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News