Salem -Tirupathi Flight Service Very Soon சேலம்- திருப்பதிக்கு விமான சேவை விரைவில் துவங்கும்:எம்.பி. தகவல்

Salem -Tirupathi Flight Service Very Soon சேலத்திலிருந்து சென்னைக்கு பயணியர் விமான சேவை துவங்கப்பட்டது போல திருப்பதிக்கும் விரைவில் சேவை துவங்க உள்ளதாக எம்.பி. பார்த்தீபன் தெரிவித்தார்.;

Update: 2023-11-01 12:18 GMT

சேலம்  விமான நிலையத்தில்  பயணிகளை ஏற்றிச் செல்லும் இண்டிகோ விமானம் (கோப்பு படம்)

Salem -Tirupathi Flight Service Very Soon

சேலத்திலிருந்து திருப்பதி ஷீரடி இடையிலான பயணியர் விமான சேவையானது விரைவில் துவங்க உள்ளதாக சேலம் எம்.பி. பார்த்தீபன் தெரிவித்தார்.

சேலத்திலிருந்து திருப்பதிக்கு செல்வோரி்ன் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. காரணம் சேலம் ஜங்ஷன் பல மாவட்டங்களுக்கு மையமாக இருப்பதால் பல ஊர்களிலிருந்தும் சேலம் மாவட்டத்திலிருந்தும் ஏராளமானோர் திருப்பதிக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் திருப்பதி செல்லும் ரயில்களில் எப்போதும் கூட்டமாகவே காணப்படுகிறது. தற்போது எம்.பி. விரைவில் விமான சேவை துவங்கும் என அறிவித்துள்ளதால் வசதி உள்ளவர்கள் விமான சேவையைப் பயன்படுத்திக்கொள்வர் நேர விரயம் தவிர்க்கப்படும் என பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Salem -Tirupathi Flight Service Very Soon


சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் திமுகவைச் சேர்ந்த சேலம் லோக்சபா தொகுதி எம்.பி. பார்த்தீபன் கடந்த 18 ந்தேதி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெற்ற மனுக்களை கலெக்டர் கார்மேகத்திடம் அவரது அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

சேலத்தில் நேற்று எம்.பி. அளித்த பேட்டியில், கடந்த 2019 ம் ஆண்டு பதவிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் 6 லட்சம் மக்களைச் சந்தித்துள்ளேன். அவர்களிடமிருந்து 1.15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு அதில் பெரும்பான்மையானவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக 40 ஆண்டுகளாக ரோடு வசதி இல்லாத மலைக்கிராம மக்களுக்கு ரோடு வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

நான் கிராமம் கிராமமாக சென்று மனுக்களை வாங்கியதைப்போல இதுவரை எந்த எம்.பியும் வாங்கியது கிடையாது.

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தனிக் கவனம் செலுத்தப்பட்டு தற்போத 575 கி.மீட்டருக்கு பாதாள சாக்கடை கால்வாய் உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முள்ளுவாடி உயர்மட்ட மேம்பால கட்டுமானப்பணியானது விரைவில் முடிக்கப்படும் என்றார்.

ஜருகுமலை, தீவட்டிப்பட்டி உட்பட 8 இடங்களில் தலா ரூ. 1.05 கோடி வீதம் ரூ- 8.40 கோடி மதிப்பில் மொபைல் கோபுரங்கள் நிறுவும் பணிகள் நடந்து வருகிறது. சேலத்தில் இருந்து மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு பயணியர் விமான சேவையானது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது அதுபோல திருப்பதிக்கும் விரைவில் விமான சேவையானது விரைவில் துவங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News