ஈரோடு இன்ஜினியர்கள் அலர்ட்-கட்டுமானத் துறையில் பெரும் சிக்கல்!

சிமென்ட் விலை மாதம் ஒரு முறை ₹10 முதல் ₹20 வரை அதிகரிப்பதால், பொதுமக்களின் வீடமைப்பு கனவு நனவாகாமல் போகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.;

Update: 2025-05-12 10:30 GMT

 எம்.சாண்ட், பி.சாண்ட், சிமென்ட் விலை ஏற்றத்தை கண்டித்து வலியுறுத்தல் :

விலை எகிறி கட்டுமானம் மந்தம் அடைகிறது :

ஈரோடு மாவட்டத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட், கருங்கல், ஜல்லி மற்றும் சிமென்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை நிர்வாகக் கட்டுப்பாடின்றி அதிகரித்து வரும் சூழல் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள், பொதுமக்கள், கட்டட ஒப்பந்ததாரர்கள், சிவில் இன்ஜினியர்கள் மற்றும் கட்டுமான துறையில் செயல்படும் பலரும் இந்த உயர்வால் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் செயலாளர் குமார வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு யூனிட் எம்.சாண்ட் ₹4,000 இருந்த நிலையில், தற்போது ₹6,000 ஆக உயர்ந்துள்ளது. இது கட்டுமான திட்டங்களை பெரிதும் பின்னடைய செய்யும் நிலையில் கொண்டு வந்துள்ளது. சிண்டிகேட் அமைப்புகள் விலை ஏற்றத்தை திட்டமிட்டு நடத்தி வருகின்றன. இதைத் தமிழக அரசு தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

மேலும், சிமென்ட் விலை மாதம் ஒரு முறை ₹10 முதல் ₹20 வரை அதிகரிக்கின்றது என்றும், கட்டுமானச் செலவுகள் கட்டுப்பாடின்றி ஏறிவரும் போது, பொதுமக்களின் வீடமைப்பு கனவு நனவாகாமல் போகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News