ஈரோடு உழவர் சந்தை சூடு பிடித்தது – 32 டன் காய்கறி விற்பனை!
தேங்காய் பருப்பு 13 மூட்டைகள் வரத்து கண்டு, ஒரு கிலோ ₹136.09 முதல் ₹171.69 வரை விலை பெற்றது.;
ஈரோடு-திருப்பூர் உழவர் சந்தை சூடு – வெள்ளை எளிலிருந்து முருங்கைக்காய் வரை விற்பனை அதிரடி :
உழவர் சந்தைகளில் விற்பனை கொடிகட்டும் கட்டத்தில் :
ஈரோடு மாவட்டம் மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், வெள்ளை எள், சிகப்பு எள் மற்றும் கருப்பு எள் உற்பத்திகள் பெரிய அளவில் வரத்து கண்டன. வெள்ளை எள் ஒரு கிலோ ₹95 முதல் ₹129 வரை, சிகப்பு எள் ₹105.29 முதல் ₹128.29 வரை, கருப்பு எள் ₹112.80 முதல் ₹148.39 வரை விற்பனையானது. மொத்தம் 329 மூட்டைகள் விற்பனையில் கலந்து கொண்டு, ₹29 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டது. தேங்காய் பருப்பு 13 மூட்டைகள் வரத்து கண்டு, ஒரு கிலோ ₹136.09 முதல் ₹171.69 வரை விலை பெற்றது. தேங்காய் மட்டும் 1,856 காய்கள் வரத்து கண்டு, ஒரு காய் ₹13.65 முதல் ₹18.35 வரை விற்பனையடைந்தது.
முருங்கையில் மாற்றம் – விலை ஏறியது :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்தில், நேற்று 3 டன் முருங்கை வந்தது. ஒரு கிலோ ₹75க்கு விற்றது. கடந்த வாரம் 4 டன் வரத்து இருந்த நிலையில், விலை ₹70 ஆக இருந்தது. தற்போது விலை உயர்ந்துள்ளது.
காய்கறி சந்தைகளில் பரபரப்பு :
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகர், பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி மற்றும் பெருந்துறை உழவர் சந்தைகள் இயங்கின. விடுமுறை நாளான நேற்று மட்டும் ஈரோடு உழவர் சந்தைகளில் 32.28 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு ₹11.56 லட்சம் வருமானம் ஈட்டியது. பிற சந்தைகளில் 73.70 டன் காய்கறிகள் விற்பனையில் கலந்து கொண்டு ₹26 லட்சம் வருமானம் பெற்றது. மொத்தமாக, உள்ளூர் சந்தை பொருள்களின் விலை நிலவரம் வேகமெடுத்துள்ளது.