parrot left from the temple கோட்டை மாரியம்மனுக்கு கண்திறக்கப்பட்டதும் கோயிலை விட்டு பறந்த பச்சைக் கிளி
parrot left from the temple சேலம் கோட்டை மாரியம்மன் மீது அமர்ந்திருந்த பச்சைக்கிளி கோயிலை விட்டு நேற்று பறந்து சென்றதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.;
parrot left from the temple
சேலம் கோட்டை மாரியம்மன் மீது பல நாட்களாக அமர்ந்திருந்த பச்சைக்கிளியானது நேற்று அம்மனுக்கு கண் திறக்கப்பட்டதும் கோயிலை விட்டு பறந்தோடியது. பக்தர்கள் இதனைப் பார்த்து பரவசமடைந்தனர்.
சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகமானது நாளை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. யாக சாலை பூஜைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் அம்மனைத் தரிசிக்கும் வகையில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் நின்று அம்மனை தாராளமாக தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
parrot left from the temple
இந்நிலையில் கடந்த 22 ந்தேதியன்று கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பச்சைக்கிளி ஒன்று பறந்து வந்தது. இது நேரடியாக சென்று அம்மன் தோள்பட்டை மீது அமர்ந்து கொண்டது. அம்மனுக்குஅபிஷேக ஆராதனை செய்யும் போதும் பக்தர்களுக்கு மற்றும் கோயில் பணியாளர்களுக்கு எந்ததொந்தரவையும் இந்த கிளியானது கொடுக்காமல் அமைதியாக இருந்தது. பூஜைக்குவைக்கப்படும் பழம்,பிரசாதத்தினை சாப்பிட்டுவிட்டு பறந்து செல்லாமல் தொடர்ந்து அம்மன் மீதே அமர்ந்திருந்தது. இதனையறிந்த பக்தர்கள் அம்மனையும் கிளியையும் ஒரு சேர தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.
இந்நிலையில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோயிலின் பின்புற நுழைவு வாயிலில் 21 அடி உயரத்தில் உள்ள மகா மாரியம்மன் உருவ சிலைக்கு கண் திறக்கும் வைபவம் நடந்தது. முதற்கால யாக பூஜையும் நடந்தது. இரவு 8மணி அளவில் பல நாட்களாக அம்மன் மீது அமர்ந்திருந்த பச்சைக்கிளி கோயிலில் இருந்து பறந்து சென்றது. அம்மனுக்கு கண் திறக்கப்பட்டதும் அம்மன் அருளால் அந்த கிளியானது பறந்து சென்றதாக பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.