மண் எடுக்க அனுமதிக்க கோரி மண்பானையுடன் வந்து மனு கொடுத்த தொழிலாளர்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க அனுமதி கோரி மண்பானையுடன் வந்து மனு கொடுத்த தொழிலாளர்கள்.

Update: 2022-01-03 13:41 GMT

இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க அனுமதி கோரி மண்பானையுடன் வந்து மனு கொடுத்த தொழிலாளர்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க அனுமதி கோரி மண்பானையுடன் வந்து மனு கொடுத்த தொழிலாளர்கள்.

பொங்கல் பானை செய்வதற்கு மண் எடுக்க அனுமதிக்காததால் பொங்கல் பானை செய்ய முடியாமல் தவிப்பதாக குலாலர்கள் பொங்கல் பானைகள் உடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம் சார்பில் 100 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொங்கல் பானைகள் உடன் முற்றுகையிட்டனர்.

குலாலர் சமுதாயத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகை ரூ.10,000 அறிவிக்கப்பட்டுள்ளது. 3000 பேருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுப்பதற்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக களிமண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தற்போது மழை காலம் என்பதால் அனைத்து கண்மாய்களிலும் குளங்களிலும் தண்ணீர் நிரம்பி இருப்பதால் மண் எடுக்க முடியாததால் பொங்கலுக்கு மண்பானைகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டு மண்பானைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த தட்டுப்பாட்டை போக்க அனைத்து நீர்நிலைகளிலும் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்மண் பானைகள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News