ஆட்சியர் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணால் பரபரப்பு நிலவியது.

Update: 2021-09-20 15:29 GMT

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முன்பாக,  மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளம்பெண்.

இராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டையைச் சேர்ந்த முனீஸ்வரி என்பவர், இராமநாதபுரம் மாவட்டம் சித்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த நாகபாண்டியை, 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து சூரங்கோட்டையில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில்,  கடந்த மாதம் இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடந்த கட்ட பஞ்சாயத்தில் தனது 6 வயது ஆண் குழந்தையை, தாயிடம் இருந்து பிரித்து தந்தையிடம் கொடுத்துள்ளனர். தனது மகனுக்கு கிட்னி நோய் இருப்பதால் அவனை சரிவர கவனிக்க மாட்டார்கள். எனவே, தன்னிடமே குழந்தையை ஒப்படைக்க கோரி பல முறை காவல் நிலையத்தில், முனீஸ்வரி புகார் செய்துள்ளார்.

எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கார் வரும் போது மண்ணெண்ணெய் ஊற்றி, முனீஸ்வரி தீ குளிக்க முயன்றுள்ளார். மாவட்ட ஆட்சியரின் ஓட்டுனர் பாய்ந்து சென்று, இளம்பெண்ணை காப்பாற்றினார். பிரிந்து வாழும் கணவனிடம் இருந்து கட்டப்பஞ்சாயத்து மூலம் பறிக்கப்பட்ட தனது மகனை மீட்டுத் தரக்கோரி ஆட்சியர் முன்னே இளம்பெண் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News