தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம்

தனுஷ்கோடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம் ஏற்பட்டு 20 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் அலைகள் எழுந்தன.

Update: 2022-05-18 00:54 GMT

தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, அதேபோல திடீரென பலத்த காற்று வீசி வருகிறது, இந்த நிலையில் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தைவிட 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் அடைந்து காணப்படுகிறது. ஆண்டு தோறும் ஆனி மாத இறுதியிலும் ஆடி மாதத்திலும் தான் பருவக் காற்று வீசுவது வழக்கம்.

இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதையடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் துறைமுகத்தில் உள்ள ஜட்டி பாலத்தில் கடல் அலைகள் மோதி 20 அடிக்கு மேல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து காணப்படுகிறது. மேலும் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். அந்தப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லாமல் இருப்பதற்காக காவல்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News