இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு கடத்த முயன்ற இருவர் கைது

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு, மற்றும் கிளிகள் கடத்த முயன்ற இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-05 12:31 GMT

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு, மற்றும் கிளிகள் கடத்த முயன்ற இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு வைத்திருப்பதாக உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனவர் சடையாண்டி தலைமையிலான வனத்துறையினர் இராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை மடக்கிபிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் சுமார் 3 கிலோ எடையுள்ள மண்ணுளிப் பாம்பு மற்றும் 6 நாட்டு பச்சை கிளிகள் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் ராபர்ட் சர்ஜி மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துதங்கம் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இவற்றை விற்பனை செய்யும் நோக்கத்துடன் கொண்டு சென்ற இருவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News