முழு ஊரடங்கிலும் ராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஞாயிறு முழு ஊரடங்கு இருந்தபோதும் ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

Update: 2022-01-16 17:19 GMT

சாமி தரிசனம் செய்ய நடந்தே சென்ற ஐயப்ப பக்தர்கள்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.

இதன் காரணமாக வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் திருக்கோவில்களில் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு வரும் 18ஆம் தேதி வரை ராமேஸ்வரம்; ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறியாமல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மகர ஜோதி தரிசனத்திற்காக சபரி மலை சென்ற ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் தரிசனத்தை முடித்துவிட்டு சுமார் 30க்கும் அதிகமான பேருந்துகளில் நூற்றுக்கணக்கான ஜயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர்.

இன்று முழு ஊரடங்கால் வாகனங்கள் எதுவும் இயக்கபடாததால் ராமேஸ்வரம் வந்துள்ள ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் தங்களது பேருந்துகளை நிறுத்திவிட்டு, சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்கின்றனர்.

பக்தர்கள் திருக்கோவிலில் நேரடி தரிசனம் செய்ய தடை விதிக்கபட்டுள்ளதால் கோயிலுக்கு வெளியே உள்ள நுழைவாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் கோயிலின் மேற்கு மற்றும் கிழக்கு வாசல் ஐயப்ப பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

எனவே போலீசார் கூட்டம் கூடுவதை தடுத்து வருகின்றனர்.  இன்று முழு ஊரடங்கு என்பதால் சில உணவுகள் பார்சல் சேவை நடைபெறுகிறது.ஆனால் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கபட்டுள்ளதால் ராமேஸ்வரம் வந்துள்ள ஜயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு அருந்தச் செல்கின்றனர்.

மேலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட கடலில் இறங்கும் ஐயப்ப பக்தர்களை மெரைன் போலீசார் கடலில் இறங்காமல் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். முழு ஊரடங்கு குறித்து தகவல் அறியாமல் வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து ஆயிரகணக்கான ஐயப்ப பக்தர்களால் கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News