ராமேஸ்வரம் பகுதியில் இன்றைய மின் தடை இடங்கள் அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இராமேஸ்வரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-11-20 05:39 GMT

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால், இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான சாத்தகோன் வலசை, குஞ்சார்வலசை, வேதாலை, மண்டபம், பாம்பன் மற்றும் தெற்குவாடி.

அதுபோல் இராமேஸ்வரம்  துணை மின் நிலைய பகுிதிகளான இராமேஸ்வரம், வேர் கோடு, வடகாடு, தங்கட்சிமடம் மற்றும் செம்மமடம் ஆகிய பகுதிகளில் இன்று 11 மணியிலிருந்து 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர், ஊரகம் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News