இராமேஸ்வரம் மீனவர்கள் ஜூலை 1ம் தேதி கடலுக்குள் செல்லுகின்றனர்

இராமேஸ்வரம் மீனவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய பின்பு, ஜூலை 1ம் தேதி கடலுக்குள் செல்லுகின்றனர்.

Update: 2021-06-08 11:08 GMT

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும்  நடைபெற்றது.

இராமேஸ்வரம் மீனவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய பின்பு, ஜூலை 1ம் தேதி கடலுக்குள் செல்லுகின்றனர்.

தமிழக கடலோரப் பகுதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 ஒநாள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். அதே போன்று இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. வருகின்ற 15ஆம் தேதியுடன் மீன்பிடி தடை காலம் முடிவடயவுள்ள நிலையில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு மீனவர்களிடம் இல்லாததால் மீனவர்கள் இன்றைய தினம் வரையில் தடுப்பூசி செலுத்தவில்லை. இதனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக பரவும் அபாயம் நிலவும் என்பதால், மீன்பிடி தடைகாலம் முடிந்தாலும் தமிழக கடலோர பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் தடுப்பூசி போட்டுகொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்பு ஜூலை 1-ம் தேதி முதல் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மீனவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News