ராமநாதபுரத்தில் பசியால் வாடியவர்களுக்கு உதவிய கொலபசி நண்பர்கள் குரூப்

ராமநாதபுரத்தில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து பசியால் வாடியவர்களுக்கு உதவி செய்த கொலபசி நண்பர்கள் குழுவினர்

Update: 2021-06-08 11:40 GMT

கொலபசி நண்பர்கள் குழுவினர்

இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் கொலபசி நண்பர்கள் அமைப்பின் சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளியோருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆயிரம் மதிப்பில் சுமார் 150 பேருக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கொலபசி நண்பர்கள் குழு என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது. கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு தங்களது குழுவின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களையும், புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் தங்களுடைய அமைப்பு சார்பாக இதுவரை சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

சென்ற வருடம் கொரோனா தொற்றில் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு சுமார் ஐந்து லட்சம் மதிப்பில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த நிலையில், இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பஸறி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்ததை அடுத்து, அவரின் நினைவாக இன்று கிரசன்ட் பள்ளி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களை தேர்ந்தெடுத்து சுமார் 150 நபர்களுக்கு ரூபாய் 1.50 ஆயிரம் மதிப்பீட்டில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் அடங்கிய பேக்கேஜ்களை இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில், இராமநாதபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில், நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவண பாண்டியன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ராஜா உசேன் ஆகியோர் வழங்கினர்.

முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சேக் தாவூத் மற்றும் பஸரி நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இதில் பயனாளிகள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News