ராமேஸ்வரம் 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: மீனவ சங்கம் கடும் கண்டனம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-27 06:06 GMT

பைல் படம்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்ல போதிய மீன் பிடி தொழிலாளர்கள் இல்லாத்தால் மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று சனிக்கிழமை மாலை சுமார் 300 க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடையே இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்த 8 இராமேஸ்வரம் மீனவர்களையும் கைது செய்து இலங்கை கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து விசாரணைக்காக மீனவர்களை கிளிநொச்சி மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Tags:    

Similar News