தமிழக முதல்வருக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் நன்றி தெரிவித்து தீர்மானம்

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-01-23 10:40 GMT
ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க கூட்டம் நடந்தது.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் கைது நடவடிக்கையை கண்டித்தும்,இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் கடந்த 21ந் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதனையடுத்தத ராமேஸ்வரம் மீனவ சங்க பிரநிதிகளை தமிழக முதல்வர் சந்திக்க விரும்புவதாக சென்னையில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததையடுத்து மீனவர்கள் கடந்த 20ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தனர்.

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மீனவர்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தியதையடுத்து கைதுசெய்யப்பட்ட சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கடிதம் வாயிலாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மீனவ பிரதிநிதிகளிடம் முதல்வர் தெரிவித்துள்ளார்.மேலும், மீனவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்த தமிழக முதல்வர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சுமார் 108 படகுகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் வீதம் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும், 17 நாட்டுப்படகு தலா 1.50 லட்சம் வீதம் மொத்தமாக 5.66 கோடி இழப்பீடு வழங்கப்படும் என உத்தரவிட்டார்.

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கபட்டுள்ள பல கோடி மதிப்பிலான மீன்பிடி படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.மேலும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உற்பத்தி விலைக்கே அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.

Tags:    

Similar News