இராமநாதபுரத்தில் சுவர் இடிந்து மூதாட்டி பலி- நள்ளிரவில் நடந்த சோகம்

இராமநாதபுரத்தில் பலத்த மழையால் நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2021-11-04 04:00 GMT

இராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்த வீடு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடியுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை அறிக்கை அறிவித்திருந்தது. இராமநாதபுரத்தில் நகரில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 3மணி நேரம் பலத்த இடியுடன் மழை பெய்தது. இராமநாதபுரம் தெற்கு தெருவில் ஓட்டு வீட்டில் அங்குசாமி மனைவி ரெத்தினம்மாள்75, இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். மூதாட்டி வீட்டின் உள்புறத்தில் உள்ள அறையில் இரவு தூங்கி கொண்டிருந்துள்ளார். நள்ளிரவில் பெய்த மழையால் வீட்டின் உள்புற சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். தகவலறிந்த இராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துராமன், வட்டாட்சியர் ரவீச்சந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கை பேரிடரால் உயிரிழந்துள்ள மூதாட்டி ரெத்தினமாள் வாரிசுதாரர்களுக்கு அரசின் சார்பில் ரூ.4லட்சம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News