தை அமாவாசையையொட்டி இராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய பொதுமக்கள்

தை அமாவாசையையொட்டி லட்சக்கணக்கானோர் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடினர். கூட்ட நெரிசலில் ஸ்தம்பித்தது இராமேஸ்வரம்.

Update: 2022-01-31 16:36 GMT

தை அமாவாசையையொட்டி லட்சக்கணக்கானோர் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடினர். 

தை அமாவாசையையொட்டி லட்சக்கணக்கானோர் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடினர். கூட்ட நெரிசலில் ஸ்தம்பித்தது இராமேஸ்வரம்.

இன்று தை அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம்அக்னி தீர்த்த கடற்கரையில் லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னேதார்களுக்கு தர்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்க ராமேஸ்வரத்திற்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய முன்று அமாவாசைகளின் போது லட்சகணக்காண பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது வடிக்கம். ஆனால் தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தியதால் கடந்த அடி மற்றும் மஹாளய அமாவசையின் போது பக்தர்கள் இன்றி அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததின் அடிப்படையில் தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் நேற்று இரவு முதலே ராமேஸ்வரம் வந்து முகாமிட்டனர்.

அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் பித்துருக்களுக்கு பின்டம், எல்லு வைத்து தர்பணம் செய்து, முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலால் சுhமி தரிசனம் செய்ய சுமார் 5 மணிநேரம் முதல் 6 மணி நேரம் காத்திருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் திருக்கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கபட்டது. கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் கண்கானிப்பு கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன் கோவிலின் நுழைவு வாயிலில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதனை தவிர கூட்ட நெரிசலான இடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கல் பொருத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீசார்; தீவிரமாக கண்கானித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரம் வந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும் கார்பார்க்கிங்கில் இட நெருக்கடியால் ராமேஸ்வரம் நுழைவு வாயிலுக்கு வெளியே சுமார் மூன்று கி.மி தூரம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தெருக்கலிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் உள்ளுர் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மேலும் மதுரை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

Tags:    

Similar News