ராமேஸ்வரத்திற்கு முக கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

தனுஸ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சோதனை. முக கவசம் அணியாமல் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.500 அபராதம்.

Update: 2022-01-25 12:00 GMT

மதுரை – தனுஸ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சோதனை. முக கவசம் அணியாமல் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ரூபாய் 500 அபராதம்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்பத்தப்பட்டு வருகின்றது. முகக் கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கபட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை-தனுஸ்கோடி தேசிய செடுஞ்சாலையில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இன்று காலை முதல் சுகாதாரத்துறையினர் திடீரென வாகன சோதனை நடத்தினர்.

அப்போது ராமேஸ்வரத்திற்குள் செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் ஆகியோர்களிடம் முககவசம் அணியாதவர்களிடம் ரூபாய் 500 அபராதம் விதித்து, முக கவசம் அணியும் படி வலியுறுத்தி வருகின்றனர். கடந்த முறை முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபாராதமாக விதிக்கபட்டு வந்த நிலையில் மாநில சுகாதாரத்துறையினரின் உத்தரவுபடி இன்று முதல் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமாக ரூபாய் 500 வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ராமேஸ்வரம் வர கூடிய சுற்றுலா பயணிகளை சுகாதாரத்துறையினர் முழுமையாக சோதனை செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என உறுதி செய்த பின் ராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News