இராமநாதபுரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Update: 2021-04-23 13:16 GMT

இராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிக்கு சென்ற அவர், வெளிவூர் மற்றும் வெளி மாநிலதில் இருந்து இராமேஸ்வரம் வருகை தரும் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறதா, முக கவசம் அணிந்து வருகிறார்களா, என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் காவல்துறை சார்பில் போடப்பட்டுள்ள தடுப்புகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் : இராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 114 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மார்ச் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 33 லட்ச ரூபாய் அபதார விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 1369 படுக்கையைத் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், ராமேஸ்வரம் மிகப்பெரிய சுற்றுலாத்தலம் என்பதால், இரவு நேரத்தில் மருந்துக்கடைகள், பால் கடைகள், மருத்துவமனைகள் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News