மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை கொண்டு வர பணம் இல்லை: கல்லூரி மாணவி கண்ணீர் மல்க மனு

மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை சொந்த ஊர் கொண்டு வர பணம் இல்லை என கல்லூரி மாணவி கண்ணீர் மல்க இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு செய்தார்

Update: 2022-05-10 04:16 GMT

மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை சொந்த ஊர் கொண்டு வர பணம் இல்லை. அங்கேயே அடக்கம் செய்து இழப்பீடு பெற்றுத் தரக்கோரி கல்லூரி மாணவி கண்ணீர் மல்க இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் திடீரென மரணமடைந்ததாக அங்கிருந்து தகவல் வந்துள்ளது. அவருடைய இரண்டு பெண் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட மனைவி ஆகியோர் கிராமத்தில் உள்ளனர். தகவல் கிடைத்து அவர்கள் அதிர்ச்சியடைந்து மலேசியாவிலிருந்து சடலத்தை கொண்டுவர பெரும் தொகை செலவாகும் என்பதால் தங்களுடைய வறுமை நிலையால் சடலத்தைக் கொண்டு வரும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என்பதால் அங்கேயே அவரது சடலத்தை அடக்கம் செய்துவிடலாம் என்றும், அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றும், ஆதரவற்ற நிலையில் கல்லூரியில் படித்து வரும் தனக்கு படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டு கண்ணீர் மல்க கல்லூரி மாணவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.தந்தையை இழந்த நிலையில் உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் கல்லூரி மாணவி தனது ஏழ்மை நிலை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News