புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு : இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை மீனவர்கள் விசைப்படகில் கருப்புக்கொடி ஏற்றி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

Update: 2021-07-18 14:07 GMT

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இராமேஸ்வரம் நாளை மீனவர்கள் விசைப்படகில் கருப்புக்கொடி ஏற்றி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை ஒருநாள் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகில் கருப்புக்கொடி ஏற்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது. 

மேலும், புதிய மீன்பிடி மசோதாவிற்கு ஒட்டுமொத்த தமிழக மீனவர்களும் கண்டனம் தெரிவித்து வரக்கூடிய நிலையில்,  மசோதாவை நிறைவேற்றுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். விரைவில் ஒட்டுமொத்த தமிழக மீனவர்களை ஒன்று சேர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும்   தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News