இராமேஸ்வரம் நகராட்சியில் குப்பைகள் அகற்றுவதற்காக 10 வாகனங்கள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

இராமேஸ்வரம் நகராட்சிக்கு குப்பை வாகனங்கள்- எம்எல்ஏ- முத்துராமலிங்கம் வாகனத்தை ஓட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-12 16:59 GMT

இராமேஸ்வரம் நகராட்சிக்கு 10  குப்பை அள்ளும் வாகனங்களை எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம்  தொடங்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகராட்சிப் பகுதியில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 15 ஆவது நிதிக்குழு பரிந்துரையின்படி, 9 இலகு ரக வாகனங்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் என ரூ.84 லட்சம் மதிப்பில் மொத்தம் 10 குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையா் ராமா் தலைமையில், இராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வாகனங்களை கொடியசைத்து தொடக்கிவைத்ததுடன், சிறிது தொலைவு கனரக வாகனத்தை ஓட்டினார். தொடா்ந்து, அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

Tags:    

Similar News