கொட்டியக்காரன் வலசையில் புதிய மின் மாற்றியை எம்.பி., திறந்து வைப்பு

கொட்டியக்காரன் வலசையில் புதிய மின் மாற்றியை எம்.பி நவாஸ்கனி திறந்து வைத்தார்.

Update: 2021-11-28 16:07 GMT

கொட்டியக்காரன் வலசையில் புதிய மின் மாற்றி திறப்பு. எம்.பி., நவாஸ்கனி திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குதக்கோட்டை ஊராட்சி கொட்டியக்காரன் வலசை புதிய மின் மாற்றி திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு சிறப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது.

இதில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி பங்கேற்றார். இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சி கொட்டியக்காரன் வலசையில் புதிய மின்மாற்றியை இயக்கத்தை இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே. நவாஸ்கனி எம்பி துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கொட்டியக்காரன் வலசை ஜமாத் தலைவர் அமானுல்லா தலைமையேற்றார். கொட்டியக்காரன் வலசை முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் தீன் காக்கும் இளைஞர் சங்கம் முன்னிலை வகித்தார்கள். இதில் குதக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கொட்டியக்காரன் வலசை ஜமாத்தார்கள் கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

அதில் கீழக்கரை முதல் கொட்டியக்காரன் வலசை, கொட்டியக்காரன் வலசை முதல் இராமநாதபுரம் வரை, நகர் பேருந்தை ஏற்படுத்தி தரவும், 2 ரேசன் கடை ஜாமாத் கட்டிடத்தில் இயங்கி வருவதால் ரேசன் கடைக்கு புதிய ரேசன்கடை கட்டி தரவும், 3 குதக் கோட்டை ஊராட்சிக்கும் உத்தரவை ஊராட்சிக்கும் பொதுவான ஐய்யனார் கோவிலுக்கும் ஒரு கலையரங்கமும் சாலை வசதியும் வேண்டியும், கோரிக்கை மனுவை வைத்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட எம்பி இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

இதற்கான ஏற்பாட்டினை முஸ்லீம் ஜாம அத்தார்கள் தீன் காக்கும் இளைஞர் சங்கத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர். மற்றும் குதக் கோட்டை ஊராட்சித் தலைவர் கோபி, 5வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெளலத்நிஷா, 6வது உறுப்பினர் தைய்யூப் கான் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.புல்லாணி மற்றும் இ.யூ.மூ.லீக் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News