மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2021-08-06 12:19 GMT

ராமநாதபுரத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் கொடியசைதது தொடங்கிவைத்தார்.

.மக்களை தேடி மருத்துவம் என்கின்ற திட்டத்தை இன்று கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து திறந்து வைத்தார்.

இந்நிலையில் இராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கு உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக செவிலியர் மற்றும் மருத்துவர்கள் நேரில் சென்று தொற்றா நோய் குறித்த பரிசோதனைகளைச் செய்து அவர்களுக்கு என்னென்ன நோய்கள் இருக்கின்றது என அறிந்து இரண்டு மாதத்திற்கான மாத்திரை மருந்துகள் அடங்கிய தொகுப்பினை வழங்கி வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா கூறும்போது தொற்றா நோய்களான சர்க்கரை நோய் இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது

இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சுகாதார வட்டங்களாக பிரித்து நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது இதில் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையை வீட்டிலே அளிப்பதற்கும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News