3ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது

Update: 2022-02-02 10:30 GMT

இராமநாதபுரம் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன(பைல் படம்)

இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, இராமநாதபுரம் ஆகிய சரக காவல்துறை பகுதியில் பல்வேறு சோதனை சாவடிகளிலும் வாகன சோதனையில் அனுமதி இல்லாமல் பதுக்கி வைத்திருந்த சுமார் 15,000 மதுபாட்டில்களை காவல்துறையினர் 3 ஆண்டுகளில் பறிமுதல் செய்தனர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சோதனை செய்ததில் பிடிபட்ட மது பாட்டில்களை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சரக பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

அனைத்து மது பாட்டில்களையும் பட்டணம்காத்தான் அருகே புறவழிச்சாலை பகுதியில் இருக்கும் கலால் துறை உதவி இயக்குனர் குருச்சந்திரன் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, மதுபானத்தை கொட்டி அழித்தனர். இராமநாதபுரம், கேணிக்கரை, பஜார், கீழக்கரை திருப்புல்லாணி உள்ளிட்ட காவல் துறையினர் மதுவை அழித்து பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் பாட்டில்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நீதிமன்ற கணக்கில் காட்டப்படாத கடந்த ஆண்டு வாகன சோதனையில் பிடிபட்டதை விட 5000 மது பாட்டில்கள் அதிகமாக இந்த மூன்றாண்டுகளில் பிடிபட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News