இராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனை

இராமேஸ்வரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-12-11 10:22 GMT

சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா சோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர்.

இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் , ஒமைக்ரான் நோய் தொற்று பரவல் எதுரொலியாக ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தீவிர பரிசோதனை, இரண்டு தடுப்பூசிகளும் போடாதாவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று உருமாறி உலக நாடுகளை ஒமிக்ரான் என்ற புதிய வகை தொற்று பரவி வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் நகராட்சி பகுதிக்குள் வரும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில வாகனங்களை சோதனை சாவடியை மறித்து முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அனைவரையும் சுகாதார துறையினர் அனுமதித்து வருகின்றனர். 

மேலும் தடுப்பூசி போடாமல் வரும் வெளிமாநிலத்தவர்களை ராமேஸ்வரம் நகர பகுதிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தும் வருகின்றனர்.

வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் உள்ளவர்களை கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்த பின்னர் அவர்களிடமிருந்து ஆதார் கார்டு நம்பர், மொபைல் நம்பரை குறித்த பின்னர் அனுப்பி வைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News