தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்த இருவர் கைது

தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்த இருவர் நாட்டுபடகுடன் கைது. இந்திய கடலோர காவல்படை, வனத்துறை நடவடிக்கை.

Update: 2021-07-06 05:42 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்

மண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து வருவதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று இரவு முதல் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை இணைந்து மண்டபம் கடற்கரையில் கூட்டு ரோந்து மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனையிட்ட போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நாட்டுப்படகை பறிமுதல் செய்து, படகில் இருந்த மீனவர்கள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வேதாளை பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் முகமது அன்சார் ஆகிய இருவர் என்பதும், மண்டபம் வடக்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் சிலர் தடைசெய்யபட்ட கடல் அட்டைகள் பிடிப்பதாகவும், அவர்களிடம் இருந்து வாங்குவதற்காக நாட்டுப்படகில் நடுக்கடலுக்கு சென்றததாகவும் தெரிவித்தனர். இந்த கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்ததும் தெரிய வந்தது.

கடல் அட்டைகளை பிடித்த இருவரும் கைது செய்யப்பட்டு வன உயிரின சரகம் மண்டபம் அலுவலகத்தில் வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யபட்ட நாட்டுப்படகில் இருந்து சுமார் 100 சாக்குகளில் இறந்த நிலையில் 2500 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News