இராமேஸ்வரம் காேவிலில் புண்ணிய தீர்த்தங்களை திறக்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களை திறக்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்.

Update: 2021-09-06 13:05 GMT

இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களை திறக்க வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் இப்படிப்பட்ட முப்பெருமைகளை கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் அமாவாசை மட்டும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு வந்து கடலில் குளித்துவிட்டு தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு பின்பு கோவிலுக்கு உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு பின்னர் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதித்திருந்தது. பின்னர் பல்வேறு தளர்வில் அறிவித்து அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கோவில்கள், டாஸ்மார்க் கடைகள் உள்ளிட்டவைகளை திறந்த தமிழக அரசு பக்தர்கள் பிரதானமாக கருதக் கூடிய தங்களது பாவங்களைப் போக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களை திறக்காமல் ஐந்து மாத காலமாக இழுத்தடித்து வருகிறது.

அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தம் திறக்கப்படாமல் இருக்கின்ற காரணத்தால் தங்களின் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு இருக்கின்ற 425 தீர்த்த யாத்திரை பணியாளர்கள் மற்றும் கடற்கரை புரோகிதர்கள் விடுதி உரிமையாளர்கள், சிறு குறு தொழிலாளர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள் இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு தொடர்ந்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லாமல் தொடர்ந்து மெத்தன போக்காக இருந்து வருகிறது.

இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்தும், கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தத்தை திறக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் நகர் அதிமுக சார்பில் நகர் செயலாளர் கே.கே.அர்ஜுனன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா முன்னிலையில் கோவிலுக்கு உள்ள 22 புண்ணிய தீர்த்தங்கள் திறக்க வலியுறுத்தி மேற்கு ரத வீதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள், யாத்திரை பணியாளர்கள் மற்றும் சிறுகுறு தொழிலாளர்கள், உள்ளூர் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News